கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான் குளம் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் என்பவரின் மகன் செல்வகுமார்(24). இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக கடந்த 6 மாதமாக பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

திருமணம் ஆகாத இவர் வழக்கம் போல் நேற்று பாய்லர் பிரிவில் சுமார் 90 மீட்டர் உயரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 90 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். உடனடியாக சக தொழிலாளர்கள் செல்வகுமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

neyveli nlc india limited plant incident

ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் செல்வக்குமார் இறப்பை அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் கிராம மக்கள் என சுமார் 500- க்கும் மேற்பட்டோர் என்.எல்.சி புதிய அனல் மின் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர்.

Advertisment

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறநத குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வழங்க கோரியும் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் செல்வகுமார் இறப்பை பற்றி செய்தி அறிந்த பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார், மாவட்ட செயலாளர்கள் சன்.முத்துகிருஷ்ணன், கார்த்திக்கேயன், ஆறுமுகம் உள்ளிட்ட பா.ம.க நிர்வாகிகள் என்.எல்.சி அதிகாரியிடம் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பாட்டாளி மக்கள் கட்சியினர் சுமார் 300- க்கும் மேற்பட்டோர் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை முற்றுகையிட்டு, கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

neyveli nlc india limited plant incident

Advertisment

மேலும் இறந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு வேலை வழங்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நடத்திய போராட்டத்தில், நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் அமைந்துள்ள குழுவினர் பாட்டாளி மக்கள் கட்சியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டதன் பேரில் கலைந்து சென்ற பாட்டாளி மக்கள் கட்சியினர் செல்வகுமார் மரணத்திற்கு நீதி வழங்கும் வரை என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரண்டு நாட்களாக இறந்த தொழிலாளியின் சடலத்தை வாங்காமல் போராட்டம் நடைபெறுவதால் என்.எல்.சியில் பதற்றம் நீடிக்கிறது.