Skip to main content

துணை முதல்வராக ஓபிஎஸ் பதவி ஏற்றது செல்லாது; உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
துணை முதல்வராக ஓபிஎஸ் பதவி ஏற்றது செல்லாது; உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

துணை முதல்வராக ஓபிஎஸ் பதவி ஏற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கறிஞர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் உட்கட்சி பிரச்சனையால் எடப்பாடி அணியுடன் ஓபிஎஸ் அணி இணைந்ததை தொடர்ந்து அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

அன்றையே தினமே ஆளுநர் தலைமையில் துணைமுதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓபிஎஸ்சின் பதவி செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் மாநிலத்தின் துணை முதல்வரை, முதல்வர் மட்டுமே நீயமனம் செய்ய முடியும் என்றும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமில்லை எனவும் கூறிப்பிட்டுள்ளார். கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில் துணை முதல்வராக ஸ்டாலினை கலைஞர் நியமித்தார். அப்போது அவருக்கு ஆளுநர் எந்த விதமான பதவி பிராமனமும் செய்து வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்