/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_178.jpg)
தூத்துக்குடி பூபாலராயர்புரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷி மகன் ஜே விஷ்வா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் மாணவர் ஜோ விஷ்வா வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் சிறுவன் ஜோ விஷ்வா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவரது அண்ணனுக்கும் ஜோ விஷ்வாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரது தாய் அதனைக் கண்டித்துள்ளார். அப்போது ஜோ விஷ்வாவை வரது தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுவன் ஜோ விஷ்வா வீட்டின் பின்புற அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவன் ஜோ விஷ்வாவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் திட்டியதால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)