Skip to main content

குட்கா விவகாரம்: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 15 நாள் அவகாசம் கேட்டு கடிதம்

Published on 05/09/2017 | Edited on 05/09/2017

குட்கா விவகாரம்: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 15 நாள் அவகாசம் கேட்டு கடிதம்




தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குட்கா புகையிலை பொருளுடன் சபைக்கு வந்தனர்.

இதையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் சட்டசபையின் உரிமை குழு கூடி எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதில் அளிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் 20 எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்பது என முடிவு செய்யப்பட்டது.

இன்று காலையில் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு 8 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை செயலகத்திற்கு சென்றனர். அங்கு சபாநாயகர் இல்லாததால் சட்டசபை செயலாளர் பூபதியை சந்தித்து 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கொடுத்தனர்.

அதில், உரிமை குழு நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. பின்னர் சேகர்பாபு கூறுகையில், உரிமை குழு நோட்டீசுக்கு பதில் அளிக்க 15 நாள் அவகாசம் கேட்டிருப்பதாக தெரிவித்தார். 

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்