
பாலியல் புகார்கள் மீது பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியில் பணியாற்றுபவர்கள் மீது ஏராளமான பாலியல் புகார்கள் எழுந்தன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறைக்கு 46 புகார்கள் வந்தன. இதனையடுத்து இந்த புகாரின் பேரில் காவல்துறை மற்றும் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டன.
இந்நிலையில் இது தொடர்பான பாலியல் புகாரின் பேரில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 23 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவைப் பள்ளிக் கல்வித்துறை அதிரடியாகப் பிறப்பித்துள்ளது. பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பாலியல் ரீதியான குற்றங்களைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.