
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி இந்த ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமிக்கப்பட்டார். மேலும் , செல்வகுமார், ஆனந்தராஜா, பொன்தோஸ் மற்றும் இளஞ்செழியன் ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைமை அலுவலகத்தில் ஆணையத் தலைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் முன்னிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத்தலைவராக இமயம் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி ஏற்றதையொட்டி எழுத்தாளர் இமயம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அவருடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 உறுப்பினர்களும் துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.