Skip to main content

மருத்துவ கலந்தாய்வு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு இ.மா.சங்கத்தினர் போராட்டம்

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
மருத்துவ கலந்தாய்வு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு இ.மா.சங்கத்தினர் போராட்டம்



சென்னை ஓமந்தூர் பல்நோக்கு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில், நீட் தேர்வு அடிப்படையில் சிறப்பு பிரிவு மாணவருக்கான மருத்துவ கவுன்சிலிங் துவங்கியது. இந்த மருத்துவமனை மருத்துவ கல்லூரியை இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நீட் தேர்வில் மத்திய பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது. தமிழக அரசு கையாலாகாதத் தனத்தை கண்டிக்கிறோம். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவை பாழாக்கியதைக் கண்டிக்கிறோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

படங்கள்: ஸ்டாலின்

சார்ந்த செய்திகள்