Skip to main content

'டிசியில் ரெட் மார்க்' மிரட்டிய தலைமை ஆசிரியை! -தற்கொலை செய்து கொண்ட 11ம் வகுப்பு மாணவன்!

திருச்சி மாவட்டம் முசிறியில் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவன், டிசியில் ரெட்கார்டு என  தலைமை ஆசிரியை மிரட்டியதால் விரக்தியில் தூக்கிட்டுத் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியில் செல்லம்மாள் என்ற தனியார் CBSC பள்ளிக்கூடம் உள்ளது. இதற்கு திருச்சி மாவட்டம் முழுவதும் 14 கல்வி நிறுவனங்கள் உள்ளது. தற்போது திருச்சியில் உள்ள மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

 

musiri incident


ஆனால் சமீபகாலமாக இந்த பள்ளிகளில் தொடர்ச்சியான மரணம் - சர்ச்சைகள் சிக்கிக்கொண்டிருக்கிறது.

முசிறி பள்ளியில் காந்திநகரை சேர்ந்த துரைராஜ் - வாசுகி தம்பதியின் மூத்த மகன் பிரவீன் என்பவர் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பிரவீனின் தந்தை துரைராஜ் மலேசியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் தாய் வாசுகி கவனிப்பில் இருந்து வந்தார்.

பிரவீன் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர்கள், மாணவிகள் முன்பு நிறுத்தி வைத்து பிரவீனை அவமானப்படுத்தும் விதமாக நடத்தியதாகவும், இதைப் பார்த்து மாணவி ஒருவர் பிரவீனை கேலி செய்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், அந்த மாணவியை கன்னத்தில் அறைந்ததால் அதற்கு தண்டனையாக அவரை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவியையும் சஸ்பெண்ட்டு செய்துள்ளது. நிர்வாகம்.

 

musiri incident


10 நாட்கள் கழித்து பள்ளிக்குச் சென்ற மாணவியை பள்ளியில் சேர்த்துக்கொண்ட நிர்வாகம் பிரவீனை மட்டும் நாள் முழுவதும் காத்திருக்க வைத்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இரு தினங்கள் சென்று காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பிரவீன் பின்னர் தாயை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போதும் அவரை காத்திருக்க வைத்துள்ளனர். அவரை பார்த்து பலரும் சிரித்தபடியே சென்றதால் பிரவீன் விரக்தி மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பின்னர் பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியைவிட்டு நீக்கியதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மன உளைச்சலுடன் வீட்டிற்கு வந்த பிரவீன்,

இது குறித்து நாம் மாணவனின் தாய் வாசுகியிடம் பேசினோம். அவர் நம்மிடம் பள்ளியின் தலைமை ஆசிரியை தீடிர்ன்னு ஒரு நாள் என் செல்போனுக்கு பேசி ஒழுங்க டிசியை வாங்கிட்டு போயிடுங்க, இல்ல டிசியில் ரெட் மார்க் போட்டு கொடுத்துடுவேன் அவ்வளவு தான் என்று மிரட்டுற பேச .இதை என் மகனிடம் சொன்னேன்..

இந்த நிலையில் தான்.இ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து செய்து கொண்டான். இவனோட இந்த விபரீத முடிவுக்கு பள்ளி நிர்வாகத்தின் கெடுபிடியான நடவடிக்கையே காரணம் என்றார்.

 

musiri incident


மாணவனின் ஒரு தவறுக்கு எத்தனை தண்டனை தருவீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ள உறவினர்கள், விரக்தி மனநிலையில் சாப்பிடாமல், தூங்காமல் தவித்த தங்கள் பிள்ளையை கவனமாக பார்த்துக் கொண்ட நிலையிலும் இந்த சோக சம்பவம் நிகழ்ந்து விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்

சம்பவம் தொடர்பாக விசாரித்த முசிறி காவல்துறையினரிடம், செல்லம்மாள் பள்ளி நிர்வாகத்தின் தலைமை ஆசிரியர் டிசி ரெட்கார்டு மிரட்டல் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என்கின்றனர் பிரவீனின் உறவினர்கள். இந்த பள்ளியில் தான் மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளின் அத்தனை குழந்தைகளும் படிக்கிறார்கள். இதனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இது வரை எடுத்ததில்லை என்பது குறிப்பிட தக்கது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்துவிட்டு நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று சோகத்துடன் காத்திருக்கின்றார் பிரவீனின் தாய் வாசுகி..!

பள்ளி நிர்வாக தரப்பிலோ நாங்கள் மாணவனை எங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துறையூர் பள்ளிக்கு அவனை மாற்ற நினைத்திருந்தோம். அதற்குள் இப்படி பண்ணிட்டானே என்று அப்பாவியாக பதில் அளிக்கிறார்கள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்