Skip to main content

பழந்தமிழரின் எழுத்தறிவு மேம்பட்ட நாகரிக வாழ்க்கை! -கீழடி அகழாய்வுப் பதிவேட்டில் வைகோ பெருமிதம்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடந்துவரும் நிலையில், இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அங்கு ஆய்வு செய்தார். கீழடி அகழாய்வுப் பதிவேட்டில் வைகோ தம் கைப்பட எழுதிய குறிப்புகள் இவை -

கீழடி அகழாய்வு என்பது ஏறத்தாழ 2600 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த பழந்தமிழர்களின் நாகரீகத்தைப் பிரகடனம் செய்பவை:

 

 Literacy Advanced Civilization - The following excavation record Vaiko boasts!

 

ஏறத்தாழ 16000 பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. கலைநுணுக்கத்துடன் பானைகள், அதில் எழுத்துக் குறியீடுகள், நுணுக்கமான கலையழகுடன் செய்யப்பட்ட பொருட்கள்,   நகர நாகரீகம் எழுத்தறிவுள்ள தமிழர் சமுதாயம் என்பதை நிரூபணம் செய்கின்றன. நீர்க்கால்வாய்கள், நெசவுத்தொழில், உருக்குத் தொழில் அடையாளங்கள் காணப்படுகின்றன. சூதுபவளம் எனும் 1 1/2 .1.5 சென்டி மீட்டர் அகலத்தில் இருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள் பிரான எழுத்துக்களின் காலத்துக்கு முற்பட்டவை. கரிம பரிவுகள் அமெரிக்காவில் புளோரிடாவில் பீட்டா ஆய்வுகள் கிமு 580 ஆண்டுகள் காலத்தியது என உறுதிப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் 10 ஏக்கர் அளவிற்குள் ஆய்வு – 110 ஏக்கரும் தொல். பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது என்ற நிலை வரவேண்டும். பக்கத்திலுள்ள கொந்தகை, மணலூர் அகரம் ஆகிய உள்ளூர் பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும். பக்கத்திலுள்ள 90 ஏக்கர் நிலமும் ஆய்வு செய்யப்பட வேண்டும். பழந்தமிழர்கள் வீடுகள் கட்டி வாறுகால்கள் அமைத்து, நெசவும்,  ஆலை போன்ற தொழிற்கூடங்கள் அமைத்திருந்தனர் என்பது நிரூபணம் ஆகிறது. இதுவரை 16000 பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 

 Literacy Advanced Civilization - The following excavation record Vaiko boasts!

 

நாகரீகமான வாழ்க்கை, எழுத்தறிவு மேம்பட்ட சமுதாயம் என்பது நிரூபிக்கப்பட்டதால் தொல்லியல் ஆய்வு தமிழத்தின் வைகை ஆற்றுப்படுகைகள், தாமிரபரணி, காவிரி ஆற்றுப் படுகைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு துணையாக வேண்டும். இன்று 11-10-2019-ல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனிவேல் தியாகராஜன், நம் புலவர் செவந்தியப்பன், பூமிநாதன், வீரபாண்டியன் உள்ளிட்ட தோழர்களுடன் வந்தோம். இவ்விடத்தில் நிர்வாகப் பொறுப்பில் உள்ள திரு.மு.சேரன், திரு.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் எங்களுக்கு மிகவும் அருமையாக விளக்கம் தந்தனர்.

பழந்தமிழர் நாகரீகத்தின் காலக்குறியீடு கீழடி ஆகும்.

பலரும் சூழ்ந்திருந்த நிலையிலும், கீழடியில் தான் பெற்ற உணர்வினை மனதில் நிறுத்தி,   பதிவேட்டில் விரிவாகவே எழுதியிருக்கிறார் வைகோ.

 

Literacy Advanced Civilization - The following excavation record Vaiko boasts!


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.