Actress Riyamikka

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் திரைப்பட நடிகை ரியாமிகா (வயது 26) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வளசரவாக்கம் காவல்நிலைய போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இவர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் மனமுடைந்து ரியாமிகா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவருடன் அவரது தம்பி பிரகாஷ் தங்கி உள்ளார். படவாய்ப்புகள் இல்லாததுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.