கோவை மாவட்டம் சூலூரில்,சூலூர் விமானப்படைப் பிரிவில் பணிபுரியும் ஊழியர் பால்டா தத்தாரியீ என்பவரது மகன் கேதல் பால்டா த்தாரியா (14), விவேக்சிங் என்பவரது மகன் வருண்சிங் ரத்தோர்(13) ஆகிய இருவரும் சூலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

Advertisment

Two sons of Air Force employees in Coimbatore are missing

இவர்களது தந்தையர் ஏற்கனவே குஜராத்தில் பணிபுந்தபோது மாணவர்கள் இருவரும் அப்போதே நண்பர்களாயிருந்துள்ளனர். மீண்டும் சூலூருக்கு வந்த பின்னரும் இவர்களது நட்பு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் இருவரும் நேற்று காலை பள்ளி சென்ற நிலையில்மாலை வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர்கள் அவர்களை தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று இரவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து போலீசார் மாணவர்கள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மாணவர்கள் பள்ளி விட்டு வீட்டுக்கும் செல்லும் வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்ந்து சில காட்சிகளை கைப்பற்றியுள்ளனர் போலீசார்.