ஈஷா அறக்கட்டளை சார்பாக காவிரி கூக்குரல் இயக்கம் என்ற பெயரில்சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Sage Jagi Vasudev in Humanity - OPS Praise!

Advertisment

நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிழல்தரும் மரங்களை வளர்ப்பதும் காப்பதும் நமது கடமை. நாட்டின் கலாச்சாரம் இன்றியமையாதது மரங்களை தெய்வமாக வழிபடுவது நமது கலாச்சாரம். 242 கோடி மரக்கன்றுகளை நடும்போது இயற்கை வளம் மட்டுமின்றி அனைத்து வளங்களும் நமக்கு கிடைக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னார்வலர்களும், பொதுமக்களும் முன்வர வேண்டும் என்றார்.

Advertisment

nn

அந்த நிகழ்வில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், காலநிலை மாற்றம் காரணமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மரத்தை நம்பிதான் பருவமழை நிலத்தடிநீர் அனைத்துமே இருக்கிறது. எம்ஜிஆர்,ஜெயலலிதா போன்று தற்போது மனிதரில் புனிதராகவாழ்ந்து கொண்டிருக்கிறார் ஜகி வாசுதேவ் என்ற அவர், சத்குரு என்றாலே பிரமாண்டம்தான். ஜகி வாசுதேவ் ஆன்மீகப் பணியில் காண்பித்த பிரம்மாண்டத்தை தற்போது மக்கள் பணியிலும் காட்டிவருகிறார் என்றார்.

Sage Jagi Vasudev in Humanity - OPS Praise!nn

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜகிவாசுதேவ், உலகிலேயே மிகவும் மண் வளம் நிறைந்த தென்னிந்தியாவை தற்போது பாலைவனமாக மாற்றி வருகிறோம்.காவிரியை மீட்பதன்மூலம் தமிழக மக்களும் கர்நாடகமக்களும் மீண்டும் சகோதரர்கள் ஆவார்கள். மழை பெய்தும் எந்த பெரிய மாற்றமும் இல்லை மரங்களை நடுவதன் மூலம்தான் மழை நீர் நிலத்தடியில் சென்றடையும். தமிழகம் செல்வம் நிறைந்த மாநிலம் கிருஷ்ணா, கோதாவரி தேடி நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.