Skip to main content

குரங்கு அம்மை பரவல்; விமான நிலையங்களுக்கு சுகாதாரத்துறை புதிய உத்தரவு!

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

ரகத

 

குரங்கு அம்மை நோய் தொடர்பாக விமான நிலையங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

 

உலக நாடுகளைக் கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்றின் வரலாறு 60 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ், முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 15 நாடுகளில் 120க்கும் மேற்பட்ட நபர்களுக்குக் குரங்கு அம்மை பரவியுள்ளது.

 

இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்குக் கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று அனைத்து விமான நிலையங்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பொதுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி  " குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்திட வேண்டும். குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் ஏதேனும் பயணிகளுக்கு இருப்பதாக சந்தேகம் இருந்தால் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.