ஓட்டுனர் உரிமம் இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை - கமிஷனர் உத்தரவு
Published on 29/08/2017 | Edited on 29/08/2017
ஓட்டுனர் உரிமம் இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை - கமிஷனர் உத்தரவு
ஓட்டுனர் உரிமம் இல்லாதோருக்கு புதிய வாகனங்களை விற்கக்கூடாது' என, வாகன விற்பனையாளர்களுக்கு, போக்குவரத்து கமிஷனர், தயானந்த் கட்டாரி உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கைகளில், தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. 'விபத்துக்களை குறைக்க, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்' என, தமிழக, போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா வலியுறுத்தி வருகிறார். மோட்டார் வாகன சட்டங்களின் படி, வாகன விற்பனையாளர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாதோருக்கு, வாகனங்களை விற்கக்கூடாது. அவ்வாறு விற்றால், விற்பவர் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும். என்றர்.