கோவை காந்திபுரத்திலிருந்து கணபதி செல்லும் சாலையில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் ஜி.பி. சிக்னல் அருகே மேம்பாலத்தின் கீழ் உள்ள தடுப்புச்சுவரில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திட்டில் இருந்து பக்கத்தில் இருந்த குழியில் தூக்க கலக்கத்தில் விழுந்தவர் மீது மண் சரிந்தாக தெரிகிறது. இதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Advertisment

kovai

இந்நிலையில் நேற்றுகாலையில் அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள், குழியில் மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிர் இழந்து கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்துசம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.