Contract workers

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அதில் ஒப்பந்த பணியாளர்களும் அடக்கம்.

Advertisment

இந்தத் தொழிற்சாலை கரோனா ஊரடங்கு காலத்தில் செயல்படவில்லை. நிறுவனம் செயல்படவில்லையென்றாலும் நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள், பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லையாம்.

Advertisment

தற்போது தொழிற்சாலை திறக்கப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. கரோனா காலத்தில் மூடப்பட்ட காலத்தில் நிரந்தர பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கியது போல் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்துப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி ஜீன் 18ஆம்தேதி சுமார் 300 ஒப்பந்தத் தொழிலாளார்கள் பெல் தொழிற்சாலை நுழைவுவாயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கரோனாவால் நிறுத்தப்பட்ட 3 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும், வேலை நாட்களில் நிறுவனத்துக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.