Skip to main content

பெண் போலீசிடம் உதவி ஆணையாளர் தவறாக நடந்ததாக வெளியான விடியோ குறித்து விசாரணை

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
பெண் போலீசிடம் உதவி ஆணையாளர் தவறாக நடந்ததாக வெளியான விடியோ குறித்து விசாரணை

கோவையில் மாணவர் போராட்டத்தின் போது பெண் போலீசிடம் உதவி ஆணையாளர் தவறாக நடந்து கொண்டதாக வெளியான விடியோ காட்சிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 4 ம் தேதி கோவை காந்திபுரம் பகுதியில் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு, நீட் தேர்விற்கு எதிரான மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை அகற்றும் போது, ஒரு பெண் உதவி ஆய்வாளரிடம் உதவி ஆணையாளர் ஜெயராம் தவறான நடந்து கொள்வது போன்ற காட்சிகள் வெளியாகின. அதிர்ச்சியை ஏற்படுத்திய இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த காட்சிகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையாளர் லட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உதவி ஆணையாளர் ஜெயராமிடம் விளக்கம் கேட்டுள்ளனர். புகார் உறுதி செய்யப்பட்டால் உதவி ஆணையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்குமார்

சார்ந்த செய்திகள்