Published on 08/09/2022 | Edited on 08/09/2022

அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இரு தரப்புகளும் நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்த நிலையில் தொடர்ச்சியாக 72 நாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளது. மொத்தமாக முன்னாள் அமைச்சர்கள், அவை தலைவர் தமிழ்மகன் உசேன், மூத்த உறுப்பினர் பொன்னையன், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என ஆரவாரம் நிறைந்த இடமாக மாறியது அதிமுக தலைமை அலுவலகம்.
முன்னதாக வெளியே உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.