Skip to main content

பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை... பாதுகாவலர் சஸ்பெண்ட்!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

  bjp incident in chennai.... bodyguard suspended

 

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர் பாஜகவில் எஸ்சி-எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு தனது பி.எஸ்.ஓ பாலமுருகனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்ற பாலசந்திரன் அங்கு நண்பர் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். பாலசந்தர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பி.எஸ்.ஓ பாலமுருகன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ அருந்த சென்றார்.

 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதனைப் பார்த்து ஓடிவந்த பி.எஸ்.ஓ உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாலசந்தர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

 

bjp

 

இந்நிலையில் பாதுகாப்புப் பணியின் பொழுது கவனக்குறைவாக இருந்த காரணத்தால் பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாலசந்தரை பாதுகாக்கும் பணி கொடுக்கப்பட்ட போதிலும் அதை தவிர்த்துவிட்டு பாலசந்தர் சென்றதால் கொலை நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பாலசந்தர் மீது 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஜாமீனிலிருந்த பாலசந்தரை தொழில் போட்டியால் பிரதீப் என்பவரும் ரவுடிகளும் சேர்ந்து வெட்டிக்கொன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.