Anbumani

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், எப்போதும் ப்ரெஷ் ஆக புத்துணர்வுடன் இருப்பார். தினமும் ஷேவிங் செய்து முகத்தைப் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்.

Advertisment

ஆனால், கடந்த சில நாட்களாக முகத்தில் தாடியுடன் காட்சியளிக்கிறார் அன்புமணி. அரசியல் தளத்திலும் பா.ம.க.விலும் அன்புமணியின் தாடி ரகசியம் என்ன? என்பது பற்றி விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

Advertisment

அன்புமணியின் தாடி ரகசியம் குறித்து விசாரித்தோம். அவருக்கு மூன்று மகள்கள். மூன்றாவது மகள் சஞ்சுயுக்தா. 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு நாள், ''அப்பா, நீங்கள் தாடி வைத்தால் நன்றாக இருக்கும். எனக்காக கொஞ்ச நாள் தாடி வையுங்களேன்'' என்று தனது ஆசையை தந்தை அன்புமணியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

மகளின் ஆசையை அறிந்து, "உனக்காக செய்கிறேன்மா" என சொன்ன அன்புமணி, மகளுக்காக கடந்த ஒரு வாரமாக தாடி வளர்த்து வருகிறார்."தாடியும் ஒரு வித புது லுக்கை அன்புமணிக்கு தந்திருக்கிறது" என்கிறார்கள் பா.ம.க.வினர்.

Advertisment