Skip to main content

கட்டுக்கட்டாக பணம்... ஏடிஎம் திருடனை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்... குவியும் பாராட்டுக்கள்!

Published on 24/08/2019 | Edited on 25/08/2019

கடந்த 20 ஆம் தேதி திருச்சியில் ஏடிஎம்மில் நிரப்ப எடுத்துச் சென்ற பணம் 16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் நைசாக பேசி அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெரம்பலூர் ரோவர் அப்பகுதியைச் சேர்ந்த முருகையா என்கின்ற ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் நேற்று ஒருவர் சவாரி செய்துள்ளார். சவாரி செய்த அந்த நபர் குடிபோதையில் தள்ளாடியபடி கையில் ஒரு டிராவல் பேக்கை வைத்திருந்துள்ளார். அறை எடுத்து தங்க வேண்டும் தன்னை ஏதாவது ஒரு தங்கும் விடுதியில் இறக்கி விடுமாறு  ஆட்டோ ஓட்டுனரிடம் போதையிலேயே கூறியுள்ளார்.

 

 The auto driver who handed over the ATM thief to the police

 

இதனைக்கேட்ட ஆட்டோ ஓட்டுனர் முருகைய்யா ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார், ஆனால் அந்த நபர் நிற்காத போதையில் இருந்ததால் விடுதி ஊழியர்கள் அவருக்கு அறை தர மறுத்தனர். அதனை அடுத்து வேறு ஏதாவது தங்கும் விடுதிக்கு வண்டியை விடுமாறு ஆட்டோ ஓட்டுனரிடம் அந்த போதை ஆசாமி கேட்டுள்ளார்.

 

 The auto driver who handed over the ATM thief to the police

 

பெரம்பலூர் புறநகர் பகுதியில் எல்.கே.எஸ் ரெசிடென்சி என்ற மற்றொரு தங்கும் விடுதிக்கு ஆட்டோ ஓட்டுனர் மீண்டும் வண்டியை விட்டுள்ளார். அப்பொழுது அடையாள அட்டை விவரங்கள் இருந்தால் தான் அறை கொடுக்கப்படும் என விடுதி ஊழியர்கள் கேட்க, முதலில் இல்லை என மறுத்த அந்த போதை ஆசாமி பின்பு பேக்கை திறந்து அடையாள அட்டையை தேடியுள்ளார்.  அப்பொழுது அந்த பையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்ததை ஆட்டோ ஓட்டுநர் முருகையா பார்த்துவிட, இதனால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர் தனக்கு தெரிந்த இடத்தில் அறை எடுத்து தருவதாக அங்கிருந்து மீண்டும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
 

 The auto driver who handed over the ATM thief to the police

 

அங்கு சென்று போலீசாரிடம் இதுகுறித்து முருகையா தெரிவித்த நிலையில், போலீசார் அந்த போதை ஆசாமியின் பையை சோதனை செய்ததில் சுமார் 13 லட்சம் ரூபாய் கட்டு கட்டாக இருந்தது. பணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்காக போதை தெளியும் வரை போலீசார் காத்திருந்தனர். போதை தெளிந்த பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த 47 வயதான ஸ்டீபன் என்பதும் பையில் வைத்திருந்த பணம் திருச்சி சிட்டி யூனியன் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

 

 The auto driver who handed over the ATM thief to the police

 

முதலில் வீட்டை விற்று வந்த பணம் என்று ஸ்டீபன் கூறிய நிலையில் தொடர் விசாரணையில் அவன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவன் என்பதும், கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும்  தெரியவந்தது. இதையடுத்து 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டுகளாக மொத்தம் 15 லட்சத்து 47 ஆயிரத்து 200 ரூபாயை கைப்பற்றிய போலீசார் அவனை கைது செய்து திருச்சி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மீதம் பணத்தை பற்றி கேட்டபோது காசை குடித்தும் ஊர் சுற்றியும் உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்தது. 

 

 The auto driver who handed over the ATM thief to the police

 

திருச்சி போலீசார் இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம்மில் கொள்ளை அடித்து அந்த பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து சுற்றிவந்த திருடனை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் முருகையாவிற்கு போலீசார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.