Skip to main content

காமராஜர் இல்லத்தைச் சுத்தம் செய்யுங்கள்! -மாணவர்களின் போதையைத் தெளிய வைத்த தீர்ப்பு!

Published on 13/08/2019 | Edited on 14/08/2019

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில், பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர் மீது போதையில் வகுப்புக்கும், கம்ப்யூட்டர் ஆய்வகத்துக்கும் வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், அந்த 8 மாணவர்களையும் மூன்றாமாண்டில் பயில்வதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தங்களிடம் கல்விக்கட்டணத்தை வசூலித்த கல்லூரி நிர்வாகம் வகுப்பில் படிப்பதற்கு அனுமதிக்க உத்தரவிடக்கோரி, குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

 

 

ARUPPUKKOTTAI STUDENTS ALCOHOL DRINK GOING TO COLLEGE CASE MADURAI HIGH COURT BRANCH JUDGMENT

 

மாணவர்கள் தரப்பில் தாக்கலான  மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் கீழ்க்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும்.  அதே நேரத்தில்,  3-ஆம் ஆண்டிலிருந்து மனுதாரர்களை வெளியே அனுப்பினால்,  அவர்களுக்கு  பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

மனுதாரர்கள் தங்களின் தவறை ஏற்கெனவே உணர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கல்லூரியில் ஒழுங்காக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர். இதனால்  மனுதாரர்கள்,  சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி,  விருதுநகரில்  உள்ள காமராஜர் பிறந்த வீட்டில்,    காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணியினை  மேற்கொள்ள வேண்டும். காமராஜர் இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். மாலை 4 முதல் 6 மணி வரை, கீழே குறிப்பிட்டுள்ளபடி,  தமிழில் மது விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை ஏந்தி,  நினைவிடத்துக்கு வெளியே பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். 

 

ARUPPUKKOTTAI STUDENTS ALCOHOL DRINK GOING TO COLLEGE CASE MADURAI HIGH COURT BRANCH JUDGMENT

 

 

● மதுவை மறந்து விடு - மனிதனாய் வாழ்ந்து விடு!
● மது அருந்தாதே - மரியாதை இழக்காதே!
● குடியை மறந்து விடு - குடும்பத்தை வாழவிடு!
● குடிப்பதை நிறுத்திவிட்டு குடிப்பவன் நட்பை ஒதுக்கிவிடு!


நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்கள் நடந்து கொள்கிறார்களா என்பதைக் கல்லூரி முதல்வர், உதவிப் பேராசிரியர் ஒருவரை நியமித்து கண்காணிக்க வேண்டும். உதவிப் பேராசிரியர், மனுதாரர்களின் செயல்பாடு குறித்து கல்லூரி முதல்வரிடம் மறுநாள் அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றதும் மனுதாரர்களிடம் உரிய கல்விக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, கல்லூரி முதல்வர் அவர்களை  மூன்றாமாண்டு வகுப்பில் அனுமதிக்க வேண்டும்.  மனுதாரர்களின் செயல்பாட்டை விருதுநகர் டவுண் காவல் ஆய்வாளரும் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

 

ARUPPUKKOTTAI STUDENTS ALCOHOL DRINK GOING TO COLLEGE CASE MADURAI HIGH COURT BRANCH JUDGMENT

 

 

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறினால், மனுதாரர்கள் மீது கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஏற்கனவே எடுத்த முடிவை செயல்படுத்துவதற்கு, கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள், கல்லூரி முதல்வர் ஆகஸ்ட் 19-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

 

தாங்கள் படிக்கின்ற கல்லூரியில் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து மாணவர்கள் தவறிழைத்ததற்காக, கல்லூரி நிர்வாகம் முதல் காவல்துறை வரை இத்தனை மெனக்கெட வேண்டியதிருக்கிறது. வெகு சிலரே என்றாலும், போதைப் பழக்கத்துக்கு ஆளான ஒட்டுமொத்த  மாணவ சமுதாயத்தினரும் தவறை உணர்ந்து திருந்துவதற்காக, நல்லதொரு படிப்பினையாக இந்த  உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.  

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.