Demonstration... Police case!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் 10 ஆம்தேதி காலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் 60 ஆண்கள் என மொத்தம் 90 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி தரவில்லை. எனவே, அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாகவும் உரிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லையென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 90 பேர் மீதும் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டு சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரிக்கை வைத்து, இந்த அமைப்பு தமிழகம் முழுக்க மாவட்ட தலைநகரங்களில் 10 ஆம்தேதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.