கோயில் நகரமான குமபகோணத்தில் 6 டாஸ்மாக் கடைகள் திறப்பு
கோயில் நகரான கும்பகோணத்தில் ஒரே நாளில் 6 டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கிவருகிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரம் மற்றும் அதனை சுற்றிளும் கோயில்கள் நிறைந்துள்ளனர். தினசரி பக்தர்களும் வந்து போகின்றனர். கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 42 டாஸ்மாக் கடைகள் இயங்கிவந்தன, 10 க்கும் அதிகமான ஸ்டார் அந்தஸ் உள்ள பார்களும் இயங்கிவந்தன,
இந்தநிலையில் மகாமக திருவிழாவை முன்னிட்டு 19 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, நீதிமன்ற தீர்ப்பின் படி மீதமுள்ள 23 கடைகளும் மூடப்பட்டு, டாஸ்மாக் இல்லாத நகராக விளங்கியது. நீதிமன்றத்தீர்ப்புக்கு பிறகு பல்வேறு முயற்சிகள் செய்தும் மக்களின் தீவிர போராட்டத்தினால் திறக்கமுடியாமல் அதிகாரிகளும் டாஸ்மாக் ஊழியர்களும் தினரினர். திறப்பதற்கான இடத்தை தேர்வு செய்துவைத்துக்கொண்டு சமயம் பார்த்து காத்திருந்தனர்.
மாணவி அனிதவின் மரனத்தால் நாடே கொந்தளித்து வரும் நிலையை சாதகமாக்கிக்கொண்டு, மக்களின் கவனம் இல்லாத நேரத்தில் 6 கடைகளை திறந்துவிட்டனர். இதனை கேள்வி பட்ட பொதுமக்களும் சமுக ஆர்வளர்களும் போராட்டத்திற்கு தயாராகிவருகின்றனர்,
-க.செல்வகுமார்