
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 27 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், இந்தியா முழுவதும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது 2வது அலையாக பல்வேறு மாநிலங்களில் கரோனா மீண்டும் மிரட்ட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 15,300 பேர் கரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர்.