
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, சிதம்பரம், கடலூர் ஆகிய காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இவைகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர்கள் ஆகிய காவலர்களுக்கு ஒரே நேரத்தில் பணியிட மாறுதல் வழங்கியுள்ளார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ்.
ஏற்கனவே காவல்துறையினர், மாவட்ட கண்காணிப்பாளரைச் சந்தித்துப் பணியிட மாறுதல் கோரி மனு அளித்திருந்தனர். அவர்களுக்கான கவுன்சிலிங் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், பெரும்பாலான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அவரவர்கள் விரும்பிய இடங்களிலும், காவல் நிலையங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களிலும் பணி மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 418 காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் அளித்து, காவலர் துறையினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் மாவட்ட கண்காணிப்பாளர் அபினவ்.