Published on 21/10/2020 | Edited on 21/10/2020

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு குறித்து ஆளுநர் இதுவரை முடிவெடுக்காத நிலையில், இதற்காக அ.தி.மு.கவுடன் சேர்ந்து போராட தயார் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் பாண்டியராஜன், அப்போது,
“விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறினால் வரவேற்கிறோம். 7.5 சதவீத இட ஒதுக்கீடு அ.தி.மு.கவுடன் இணைந்து போராட தயார் என்பது தேவையற்றது. போராடுவதற்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன அதற்காக மு.க.ஸ்டாலின் போராடலாம்” என்றார்.