புதுச்சேரியில் விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும் - நாராயணசாமி

நியூ இந்தியா சிந்தனை சார்பில் " சபதம் மூலம் சாதிப்போம்" என்ற விவசாயிகள் பற்றிய சிறப்பு கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் நிலங்கள் பாதுகாக்க வேண்டும், விவசாயிகள் நிலங்கள் மூலம் அவர்கள் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற திட்டத்தை பாரத பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
அதன் படி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், புதுச்சேரி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி நில உரிமையாளர்கள் இடையே இன்று நடந்த கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தொடங்கப்பட்டது.
மேலும் புதிய இந்திய சிந்தனை என்ற திட்டத்தை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று ஒன்று கூடி உள்ள விவசாயிகள் நிலங்கள் பாதுகாக்க பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
விவசாயிகள் நிலங்கள் மூலம் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்துவோம் என்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
- சுந்தரபாண்டியன்