Skip to main content

தீர்ப்புக்கு முன்புவரை சூட்டிங்கில் பிஸியாக இருந்த குர்மீத் சிங்!

Published on 30/08/2017 | Edited on 30/08/2017
தீர்ப்புக்கு முன்புவரை சூட்டிங்கில் பிஸியாக இருந்த குர்மீத் சிங்!
 
பக்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு, ரோக்தக் சிறையில் இருப்பவர் ராம் ரஹீம் சிங். சிர்சாவில் உள்ள இவரது தேரா சச் வழிபாட்டு அமைப்பின் தலைமையகம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.



சாமியார்களின் வழிபாட்டுத் தளங்கள் பொதுவாக ஆன்மீகத்திற்கு முன்னிரிமை அளிப்பவையாக இருக்கும். ஆனால், தன்னை ஒரு சாமியாராக முன்னிறுத்திக் கொண்ட குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் சிர்சா தலைமையகம் சினிமாவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பாலியல் வன்புணர்வு குற்றத்தின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு வரை, ராம் ரஹீம் நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் ‘ஆன்லைன் குருகுல்’ திரைப்படத்தின் சூட்டிங் சிர்சா தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சிர்சா தலைமையகத்தில் சினிமா படப்பிடிப்புக்கான பிரத்யேகமான உள் மற்றும் வெளிவளாகங்கள் உள்ளன. பிரம்மாண்டமான செட்டுகளும் போடப்பட்டுள்ளன.

இந்த செட்டுகளில்தான் எம்.எஸ்.ஜி மெசஞ்சர் ஆஃப் காட், எம்.எஸ்.ஜி-2, ஜட்டு என்ஜினியர் மற்றும் ஹிந்த் கா நபக் கோ ஜவாப் உள்ளிட்ட படங்களின் 70% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வளாகத்திற்குள் இருக்கும் பள்ளி, கல்லூரிகளிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட படங்களை வரும் பக்தர்களுக்குக் காட்ட, உள்ளேயே பிரம்மாண்டமான திரையரங்கங்களும் உள்ளன.

ராம் ரஹீம் வெளியே செல்லும் போது 100 கார்கள் அணிவகுத்துச் செல்லும். அதில் ஒரே வண்ணத்திலான நான்கு விலையுயர்ந்த கார்களில் ஏதோ ஒன்றில் ராம் ரஹீம் பயணிப்பார். மேலும், அவர் எந்தக் காரில் இருக்கிறார் என்பது பொதுமக்கள் யாருக்கும் தெரியாது என தேரா சச் வளாகப்பணியாளர் தெரிவித்துள்ளார்.

அவரது அணிவகுப்பில் பெண் காவலர்களும் இடம்பெற்றிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்