A snake bit a boy and snake passed away

Advertisment

சத்தீஸ்கர் மாநிலம், ஜாஸ்பூர் மாவட்டத்தில் பந்தர்பந்த் என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் தீபக். இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் அவரது கையில் ஏறிக்கொண்ட நல்ல பாம்பு கையைச் சுற்றிக்கொண்டது. சிறுவன் சுதாரிப்பதற்குள் பாம்பு சிறுவனின் கையினைக் கடித்தது.

கையில் சுற்றி இருந்த பாம்பைஅகற்ற முடியாததால் இரண்டு முறை பாம்பினைக் கடித்துள்ளார்.தனது மகனைப் பாம்பு கடித்துவிட்டது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குவிஷத்தடுப்பூசி செலுத்தினர். எனினும் 24 நான்கு மணி நேர தீவிர கண்காணிப்பில் சிறுவன் வைக்கப்பட்டார்.பாம்பு கடித்தும் விஷத்தினை வெளியேற்றாததால் உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை என்கிற நிலையில் ஒரு நாள் கண்காணிப்பில் சிறுவன் வைக்கப்பட்டுபின் மீண்டும் மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுவன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். பாம்பு கடித்து சிறுவன் உயிர் பிழைத்த நிலையில் சிறுவன் கடித்ததில் அந்த பாம்பு இறந்து போனது.