Skip to main content

2050-ல் உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும் இந்தியா!

Published on 18/08/2017 | Edited on 18/08/2017
2050-ல் உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும் இந்தியா!

இந்திய மக்கள்தொகை வரும் 2050-ஆம் ஆண்டு தற்போதுள்ள நிலையைவிட 323 மில்லியன் அதிகரித்து, 1.7 பில்லியனாக இருக்கும் என மக்கள்தொகை குறிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்திய மக்கள்தொகை 1.35 பில்லியனாக உள்ளது. அதாவது 135 கோடி. இது வரும் 2050-ஆம் ஆண்டு 26% அதிகரித்து 170 கோடியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பு அமெரிக்காவின் மக்கள்தொகையை ஒத்ததாகவும், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் கூட்டு மக்கள்தொகையை விட அதிகமாக இருக்கும் எனவும் மக்கள்தொகை குறிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்திய மக்கள்தொகையில் 15-24 வயதுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 21%-ஆக உள்ளது. இது 2050-ஆம் ஆண்டில் 17%-ஆக குறையும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உலக மக்கள்தொகை 750 கோடியிலிருந்து 31% அதிகரித்து, 2050-ஆம் ஆண்டு 980 கோடியாக இருக்கும் எனவும் இந்தத் தகவல் தெரிவிக்கிறது. 

இந்த மக்கள்தொகை கணிப்பின் படி, இந்தியாவின் மக்கள்தொகைக் கொள்கையில் மாறுதல்களை ஏற்படுத்தாவிடில், உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்