ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைப்புதற்கு
நாளை கடைசி நாள்!வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், 'பான்' எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. வருமான வரி இணையதளத்தில், அதற்கான வசதிகள் செய்யப்பட்டன. ஒரே நேரத்தில், ஏராளமானோர் இணைக்க முயன்றபோது, இணையதளம் முடங்கியது.
அதனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான, ஜூலை, 31க்குள், பலர் அதை செய்ய முடியவில்லை. அதைத் தொடர்ந்து, இரு எண்களையும் இணைப்பதற்கான அவகாசம், ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை இணைக்காதோர், incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், 'linkaadhaar' என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், 'கிளிக்' செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இரு எண்களை இணைக்க முடியும்.