Skip to main content

வைரலாகும் சூர்யாவின் நியூ லுக்! (படங்கள்)

 

 

மணிரத்னத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் சுதா கொங்கரா, இறுதிச் சுற்று படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். அந்தப் படத்தை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத கூட்டணியாக சுதா-சூர்யா இணைந்து ‘சூரரைப் போற்று’ உருவானது. 

 

கரோனா அச்சுறுத்தலால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் பத்தே நாட்கள் உள்ள நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் உத்ராவின் திருமண நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் சூர்யா, மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி ஆகியோர் கலந்துக்கொண்டனர். சூர்யா, நீண்ட தலைமுடியுடன் புது  லுக்கில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.