The heart of the Salem youth who flew to Chennai; A resilient event

சேலத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் சென்னையில் உள்ள சிறுமிக்கு பொருத்தப்படுவதற்காக விமானத்தில் கொண்டு வரப்பட்டது.

Advertisment

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். கடந்த ஆறாம் தேதி அந்தப் பகுதியில் உள்ள பனை மரத்தில் நுங்கு வெட்டுவதற்காக சந்தோஷ் குமார் மரத்தில் ஏறியுள்ளார். அப்போது தவறி விழுந்தசந்தோசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சந்தோஷ் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவடைந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சந்தோஷ் குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன் வந்த நிலையில் அவருடைய இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல் ஆகியவை எடுக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டு தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

சந்தோஷ்குமாரின் இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுமிக்கு பொருத்துவதற்காக விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சேலத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இதயம் அவசர ஊர்தி மூலம் அந்தக் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் உறுப்புகளைத்தானம் செய்த சந்தோஷ் குமாரின் உடலுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மணி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.