'டார்லிங்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நிக்கி கல்ராணி முதல் படத்திலேயே பலரின் கவனத்தை பெற்றார். இதனைத்தொடர்ந்து 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'கலகலப்பு 2', 'மொட்டை சிவா கேட்ட சிவா', 'மரகத நாணயம்' என பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.இதனிடையே 'மரகத நாணயம்' படத்தில் நடித்த ஆதியும் நிக்கி கல்ராணியும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும்தகவல் வெளியாகியது.

Advertisment

இந்நிலையில் ஆதி - நிக்கி கல்ராணி இருவருக்கும் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தநிக்கி கல்ராணி, தங்களது நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.