Chance of rain in 9 districts

Advertisment

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அறிவிப்பின்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தென்காசி, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி வேலூரில் 110 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, வேலூர், மதுரை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் 108 டிகிரி பாரன்ஹீட்டும், திருத்தணி, திருப்பத்தூரில் 107 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.