Skip to main content

தமிழ்நாடு போலீசுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

Published on 29/11/2017 | Edited on 29/11/2017
தமிழ்நாடு போலீசுக்கும் மற்றவர்களுக்கும்  என்ன வித்தியாசம்?

பகிர்கிறார் 'நிஜ  தீரன்'  ஜாங்கிட் IPS... 





பவாரியா, குற்றப்பரம்பரை, தமிழ்நாடு போலீசின் சாதனை என பல பேச்சுகளைத் தொடக்கிவைத்தது சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம். முக்கியமாக, தமிழ்நாடு போலீஸைப் பற்றிய உயர்ந்த அபிப்ராயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது. அதே வேகத்தில், கன்னியாகுமாரி அருகே ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டிச் சென்றவரை லத்தியால் நடுமண்டையில் அடித்து இன்னொரு முகத்தை காட்டியிருக்கிறார்  நமது காவல்துறை அதிகாரி ஒருவர். தமிழ்நாடு காவல்துறை பிறரைக் காட்டிலும் எப்படி வித்தியாசமானவர்கள் என்று கூறுகிறார் திரு.ஜாங்கிட் IPS....         

"இந்தியாவுல எங்க போனாலும் எல்லாருக்கும் தெரியும், ஏன் உலக அளவில் கூட தெரியும். தமிழ்நாடு போலீஸ்னா தனி மரியாதை இருக்கும். இங்க எல்லாரும் ஹார்ட்வொர்க் பண்ணுவார்கள், வேலை நேரமெல்லாம் பார்க்காமல் உழைக்கிறார்கள். டே அண்ட் நைட் வேல பாப்பாங்க, ரிசல்ட் காட்டுவாங்க, உடனடி ஆக்ஷன் எடுப்பாங்க. பல மாநிலங்களோடயும் நான் ஒப்பிட்டு பார்த்திருக்கேன். இந்த பவாரியா கேஸ் எடுத்துக்கிட்டா கூட,  அந்த டைம்ல நாங்க இங்கிருந்து எல்லா பிங்கர் ப்ரிண்ட்ஸ், ஃபைல்ஸோட போனோம், ஆனா அங்க நிறைய ஸ்டேட்ல பிங்கர் ப்ரிண்ட்ஸ்  ரெகார்ட் பண்றத செய்யவே மாட்றாங்க, அவுங்க வச்சுருக்குறதும் இல்ல, அத அவுங்க செய்யவும் மாட்றாங்க.    சோ அதனாலதான் நாங்க ஜெயில்ல போய் கம்பேர் பண்ணவேண்டியதா போச்சு. இப்போ தமிழ்நாட்ல எஸ்.ஐ ஆபீஸ் போனாக்கூட எல்லாம் கிடைச்சுடும். இந்த மாதிரி  சம்பவங்கள்னா உடனே நடவடிக்கை எடுப்பாங்க. அதனாலதான் தமிழ்நாடு இந்த அளவு அமைதியா இருக்கு. 




இந்த 2005 பவாரியா  கேஸ் ஜட்ஜ்மண்ட்ல கூட  எழுதிருக்காங்க தமிழ்நாடு போலீஸ், ஸ்காட்லாந்து போலீஸ்க்கு அடுத்துனு... நீங்க அந்த ஜட்ஜ்மெண்ட்ட கூட பாருங்க. இந்த படத்தில் கைரேகை நிபுணரா நடிச்சிருக்கும் தனஞ்செழியன் தான் நிஜத்தில் எங்களுடன் வந்து ஆக்ரா சிறையில் இருந்த  குற்றவாளியின் கைரேகையோடு ஒத்துப் போவதை கண்டுபிடித்தார். கைரேகையை பார்த்தே பல குற்றவாளிகளை அடையாளம் கண்டவர் அவர். பயிற்சியும் அர்ப்பணிப்பும் இங்க இருக்கு."  


இதே படத்துல, போலீஸ் கொள்ளைக்காரர்கிட்ட, 'எதுக்காக தமிழ்நாட்டை குறி வச்சீங்க?'னு கேக்கும்போது 'இங்க தப்பிக்கிறது சுலபம்'னு சொல்லுகிறாரே...     

"நான்தான் ஓமாட்ட கேட்டேன், ஏன் நீங்க தமிழ்நாட்டுல அடிக்கடி சம்பவம் பண்ணுணீங்கனு கேட்டேன். அதுக்கு அவன் தமிழ்நாட்டுல ஒரு பெரிய வீடு இருந்துச்சுன்னா(வி.ஐ.பி.) கண்டிப்பா அந்த வீட்டுல  நிறைய நகைகள் இருக்கும். ஒரு பெரிய வீட்ட அட்டாக் பண்ணா கண்டிப்பா அங்க  நெறைய தங்கம் கிடைக்கும். அதனாலதான் நாங்க தமிழ்நாட்டுக்கு வாரோம்.  இரண்டாவது  ஹைவேல போய்ட்டு வர ஈஸியா இருக்கும், யாரும் சோதனை பண்ண மாட்டாங்க.   உ.பி. ல சாரன்பூர் எம்.எல்.ஏ. மர்டர் கேஸ்ல வேற கேங்ல இருக்க சிலர் மேல என்கவுன்ட்டர் பண்ணாங்க. தமிழ்நாட்டுல என்கவுன்ட்டர் பண்ண மாட்டாங்க. அதனால  தமிழ்நாட்ல போய் பண்ணுனா தப்பிக்கலாம் என்று நெனச்சோம்னு சொன்னாங்க. ஆனா நாங்க இரண்டு பேர என்கவுன்ட்டர் பண்ணிட்டுதான் இவுங்கள ஃபுல்லா அரெஸ்ட் பண்ணோம்.  எந்த பவாரியா கேங்கும்  இனி தமிழ்நாட்டு பக்கம் வரமாட்டாங்க."  


தொகுப்பு : கமல் குமார் 

சார்ந்த செய்திகள்