2ஜி தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டுவராது: நாராயணன்
2ஜி தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டுவராது என்று பாஜகவைச் சேர்ந்த நாராயணன் கூறியுள்ளார்.

ஆ,ராசா, கனிமொழி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். குற்றமே நடக்கவில்லை என்று நீதிபதி சொல்லவில்லை. குற்றம் சரியான வகையில் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி சொல்லியிருக்கிறார். மேல்முறையீடு செய்யப்பட்டால் மேலும் இதுதொடர்பான சரியான வாதங்கள் வைக்கப்பட்டு அதன் மூலமாக நீதி நிலைநாட்டப்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகிய தனிநபர்கள் மீதுதான் இந்த வழக்கு. இந்த தீர்ப்பால் திமுகவுக்கு சந்தோஷம்தான். இதனால் தாங்கள் வலுவடைவோம் என்று எண்ணுவார்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவருமா என்றால் அப்படி ஒன்றும் இருக்காது. இவ்வாறு கூறினார்.
-வே.ராஜவேல்