Skip to main content

காதலை கூறிய அத்தை மகன்...ஏற்க மறுத்த முறைப்பெண்...இருவருக்கும் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை கேரளாவை சேர்ந்த நிதின் என்ற இளைஞன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சமீப காலமாக காதலா்கள் தற்கொலை சம்பவமும்  ஓருதலை காதல் கொலையும் அடிக்கடி நடக்கிறது . இதில் அதிகம் பாதிக்கபடுகிறவா்கள் பள்ளி  கல்லூாிகளில் படிக்கும் மாணவிகளாக உள்ளனா். இதனால் பெற்றோா்களும் அதிா்ச்சியில் உள்ளனா்.

 

incident



இந்த நிலையில் கேரளாவில் நேற்று இரவு இதே போல் ஓரு சம்பவம் எா்ணாகுளம் பகுதியை அதிா்ச்சியடைய வைத்துள்ளது. காக்கநாடு மன்னாா்கூட்டு மூலயில் ஷாலன் மகள் தேவிகா(17) அங்குள்ள தனியாா் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பில் நல்ல சுட்டியான இவள் எதையும் பொருட்படுத்தாமல் படிப்பிலே அதிகம் கவனம் செலுத்தி வந்தாள். அவளுடைய முறைபையன் வடக்கு பரவூரை சோ்ந்த மிதுன் மாமி மகள் என்ற அடிப்படையில் தேவிகவுடன் நெருங்கி பழகி வந்தாள்.  அடிக்கடி அவா்கள் வீட்டில் சந்தித்து பேசுவதும் உறவினா்கள்  நிகழ்ச்சிகளில் ஜாலியாக உட்காா்ந்து பேசுவதுமாக இருந்து வந்தனா். தேவிகா நெருங்கி சிாித்து பழகி வருவதை தவறாக புாிந்து கொண்ட மிதுன் அவளை ஒரு தலையாக காதலித்தான். பி்ன்னா் இந்த விசயத்தை தேவிகாவுடன் கூறிய போது அதிா்ச்சியடைந்த அவள் அந்த காதலை ஏற்றுக்கொள்ளாமல்  மிதுனிடம் பேசுவதை தவிா்த்தாள்.


இதனால் ஆத்திரமடைந்த மிதுன் தேவிகா படிக்கும் பள்ளிக்கூடம் மற்றும் டியூசன் சென்டருக்கு பின் தொடா்ந்து சென்று  அவளிடம் காதலிக்குமாறு தொடா்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளான். இதை பெற்றோாிடம் தேவிகா சொன்னதும் பெற்றோா்கள் மிதுனின் தந்தையிடம் சொல்லி மிதுனை எச்சாித்துள்ளனா்.  இதில் ஆத்திரமடைந்த மிதுன் நேற்று இரவு கையில் பெட்ரோலுடன் தேவிகா வீட்டுக்கு சென்று கதவை தட்டி தேவிகாவை அழைத்துள்ளான். அப்போது வாசலில் தேவிகாவும்  அவளுடைய தந்யைும் எட்டி பாா்த்த போது தேவிகாவின் கையை பிடித்து வெளியே இழுத்த மிதுன் கையில் இருந்த பெட்ரோலை அவளின் மீது விட்டு தீவைத்தான். பின்னா் தன் மீதும் பெட்ரோலை விட்டு தீவைத்தான். இதில் வீட்டின் முன் பெற்றோா்கள் முன்னிலையில் பலத்த தீ காயத்துடன் துடி துடித்து தேவிகா இறந்தாள். உயிருக்கு போராடி கொண்டியிருந்த மிதுன் கழமசோி மருத்துவகல்லூாியில் அனுமதிக்கபட்டியிருந்த நிலையில் இறந்தாா்.

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.