Skip to main content

சட்டம் சாமானியர்களுக்கு மட்டும்தான்!  சர்க்காருக்கு அல்ல!

Published on 03/09/2018 | Edited on 03/09/2018

இருசக்கர வாகனங்களில் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் ஒரு அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. உடனே, இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஆயத்தமாகிவிட்டனர் காக்கிகள். 


 

jayalalithaa car


 

பெரும்பாலான இடங்களில் கறாராக நடந்துகொள்கின்றனர். சில இடங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் கண்டுகொள்வதில்லை. ஹெல்மெட் அணிந்திருந்தாலும், ஆர்.சி.புக், லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ் போன்றவற்றை கேட்கிறார்கள். இவற்றில், ஆர்.சி. புக், லைசென்ஸ் விஷத்தில் பிரச்சனைகள் வருவதில்லை. பெரும்பாலானோர் வைத்திருப்பார்கள். இந்த இன்ஸ்யூரன்ஸ் இருக்கிறதே! அதாவது, வாகனத்துக்கான காப்பீடு. இதுதான் பல வாகனங்களுக்கும் காலாவதி ஆகியிருக்கும். ஏனென்றால், இருசக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ வாங்கும்போது, ஓராண்டுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தப்படும். அது காலாவதியான பிறகு, பலரும் காப்பீட்டைப் புதுப்பிப்பது இல்லை. அதனால்தான், காப்பீடு இல்லை என்ற காரணத்துக்காகப் பலரும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. 
 

 

 

வாகன சோதனை நடத்தி, காப்பீடு விஷயத்தில் சாமானியர்களைக் கசக்கிப் பிழியும் போக்குவரத்துக் காவல்துறையினர்,  அரசுத்துறை வாகனங்களுக்கும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்களா?  விசாரணையில் இறங்கினோம். 
 

jayalalithaa car


 

2014, மே 8-ஆம் தேதி, சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பயன்பாட்டிற்காக டொயேட்டா கிர்லோஸ்கர் கார்கள் வாங்கப்பட்டன. இவையனைத்தும் சென்னை காவல் ஆணையர் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டன. இந்தக் கார்களை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். 2015, மே 7-ஆம் தேதியோடு இந்த வாகனங்களுக்கான காப்பீடு முடிந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காப்பீடு செலுத்தாமலேயே, இந்த வாகனங்கள் உலா வருகின்றன. அந்த வாகனங்களின் பட்டியல் இதோ –
 
 

வாகன எண்     பயன்படுத்துபவர்
டி.என்.01 ஜி 6276   கூடுதல் ஆணையர் (தெற்கு) மகேஷ்குமார் அகர்வால்
டி.என்.01 ஜி 6298 இணை ஆணையர் (தெற்கு) மகேஷ்வரி
டி.என்.01 ஜி 6283  தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன்


 

காவல்துறை அதிகாரிகளின் வாகனங்கள்  இப்படியென்றால்,  அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களின் வாகனங்கள் எப்படி? 
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்காக, அவர் பதவியேற்ற 10 நாட்களில், அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி டொயேட்டோ கிர்லோஸ்கர் கார் வாங்கப்பட்டது. கூடுதல் செயலாளர் பெயரில் பதிவு செய்யப்பட்ட (பதிவு எண் டி.என்.07 ப்பி.ஜி. 5577) இந்த  வாகனத்துக்கு,  இன்று வரையிலும் காப்பீடு என்பதே இல்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்காக 2018, ஜனவரி 18-ஆம் தேதி புதிதாக, டி.என்.07 சி.எம். 2233  பதிவெண் உள்ள  கார் ஒன்று  வாங்கப்பட்டது. இந்தக் காருக்கு உரிய காப்பீட்டு தொகையை செலுத்திவிட்டனர். 


 

jayalalithaa car


வாகனக் காப்பீடு மிகவும்  அவசியமானது. விபத்து நேரிடும்போது, நமக்கான இழப்பீடோ, அல்லது வாகனம் சேதம் அடைந்தால், அதற்கான இழப்பீடோ, காப்பீடு நடப்பில் இருந்தால் மட்டுமே, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறமுடியும். அதற்காகத்தான், காப்பீடு சான்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. காப்பீடு சான்றி இல்லாமல் வாகனங்களை இயக்குவது, வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால், மோட்டார் வாகனச் சட்டம் 146, 196-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். அப்படியென்றால் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள்தானே? அந்த வகையில்,  ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் குற்றவாளிகள் அல்லவா? 

 

 

 

jayalalithaa car

 

 

jayalalithaa car


 

 

 

 

 


 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.