Skip to main content

“அவர்கள் நம்மை பிரிக்கிறார்கள்”- மோடி அரசை விமர்சித்த பி.சி. ஸ்ரீராம்

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
 

pc sriram

 

 

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரும் இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய மசோதாவின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்கள் ஐந்து ஆண்டுகள் வசித்திருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், இஸ்லாமியர்களை மட்டும் புறக்கணிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவருவதை ஏற்க முடியாது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், இதுகுறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், “அவர்கள் நம்மை பிரிக்கிறார்கள். சிஸ்டம் மீதான நம்பிக்கை கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. அவர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் திமிரின் மொழி தெரிகிறது. ஆனால், நம்முடைய மதச்சார்பிண்மை மனது வலுவாக பிறந்து, வலுவாக நிலைக்கிறது” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

CAB


 

சார்ந்த செய்திகள்