/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a7112.jpg)
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியின் 5 வயது மகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய்கள் (ராட் வைலர் இன வகை) கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கதறி அழுததைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர். நாய்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதேபோல சென்னை ஆலந்தூர் பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் ஒருவனை வளர்ப்பு நாய் கடித்து காயமடைந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த அஸ்வந்த் என்று சிறுவன் ஆலந்தூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு இருந்த வளர்ப்பு நாய் சிறுவன் அஸ்வந்தை கடித்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)