புதிய படத்தில் மீண்டும் இணையும் ‘ஒரு நொடி’ படக்குழு

oru nodi team joined once again for new movie

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடித்திருந்த படம் ‘ஒரு நொடி’. எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில் அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருந்தார். கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் மீண்டும் இக்கூட்டணி புதிய படத்திற்கு இணைந்துள்ளது. அமோகம் பிக்சர்ஸ் சார்பில் கே.சுபாஷினி மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே.ஜி. ரத்திஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை தனஞ்செயன் தனது கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யவுள்ளார்.

ஒரு நொடி படத்தை இயக்கிய பி.மணிவர்மன் இயக்கும் இந்தப் படத்தில் தமன் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மால்வி மல்ஹொத்ரா கதாநாயகியாக நடிக்க மைத்ரேயா, ரக்ஷா செரின் இணைந்து நடிக்கின்றனர். அருன் கார்த்தி, காளி வெங்கட், முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, யாசர், சிவம், பேபி சஃபா, நக்சலைட்ஸ் நிவேதிதா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

இதில் படக்குழு மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற உள்ளது. சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார். இப்படத்தின் தலைப்பு அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட இதன் தயாரிப்பாளர்கள் திட்டமிடுகின்றனர்.