david warner

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ள நடராஜனுக்கு, ஆஸ்திரேலிய அணி வீரரும், ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 20 போட்டிகளுக்கான அணியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இடம்பிடித்துள்ளார்.

Advertisment

நடராஜன், ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் வழிநடத்தும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தன்னுடைய அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள காணொளியில், இந்திய அணியில் இடம்பெற்றதற்காக நடராஜனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,"வாழ்த்துகள் நடராஜன். உங்களை ஆஸ்திரேலியாவில் சந்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முதற்கட்டமாக நடைபெறுகிறது.