Skip to main content

அரசுப்பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

 

women incident youth arrested police dharmapuri district

 

தர்மபுரி அருகே அரசுப்பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை நடத்தி வரும் உணவகத்தில் பிரபு (வயது 25) என்ற வாலிபர் 6 மாதம் வேலை செய்துவந்தார். கடந்த ஆண்டு அவர் திடீரென்று வேலையை விட்டு நின்றுவிட்டார். 

 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மாணவியின் தாய் கர்ப்பப்பைச் சிகிச்சைக்காக கோபிநாதம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த மாணவி கடைக்குச் செல்வதற்காக வெளியே வந்தபோது, அங்கு வந்த பிரபு அவருக்கு ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் அழைத்துள்ளார். அதற்கு வர மறுத்த மாணவி, வீட்டிற்குள் சென்றுள்ளார். 

 

அப்போது அவரைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற பிரபு, மாணவியைக் கட்டாயப்படுத்தித் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அமர வைத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவர் தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். 

 

இந்தச் சம்பவம் குறித்து வீட்டில் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் மாணவியும் மறைத்து வந்துள்ளார். ஆனால், அவருடைய வயிறு பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. இதனால்  சந்தேகம் அடைந்த பெற்றோர், சில நாள்களுக்கு முன்பு அவரிடம்  விசாரித்துள்ளனர். 

 

அப்போதுதான் அந்த மாணவி, பிரபு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டார் என்றும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். 

 

மேலும், இதுகுறித்து அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆய்வாளர் லதா, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) அவரைக் கைது செய்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.