Skip to main content

அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை - ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

விஐடி ( வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ) சார்பில் 2019-20க்கான மத்திய பட்ஜெட் குறித்த அனைத்து தரப்பு கலந்துரையாடல்  சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை  தெரிவித்தனர்.

v

 

மத்திய பட்ஜெட் குறித்து விசுவநாதன் பேசுகையில், தமிழ்நாட்டில் வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் ஒன்றாக  அமர்ந்து பேச வேண்டும் என்றார். நாட்டில் நீர் கிடைப்பது மிகக் குறைவு, இது மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை இணைப்பதின் அவசியத்தை கட்டாயமாக்கியது என்றார். கேரளா மற்றும் கர்நாடகாவில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லாமல் கடலில்  கலக்கின்றன என்றார். சுகாதாரத்திற்காக ஒரு சதவிகிதம் ஒதுக்கீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதிற்கும்  குறைவாக ஒதுக்கீடு செய்வது நாட்டுக்கு ஒரு நல்ல அறிகுறி அல்ல என்று அவர் கூறினார்.

 

மக்களை வறுமையிலிருந்து வெளியே வரச் செய்ய அரசாங்கம் கொள்கைகளை கொண்டு வர வேண்டும் என்றார். இந்தியாவில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இந்தியாவில்  மேற்கு வங்கம் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது.

 

நாட்டில் ஒரு நாளைக்கு 1 அமெரிக்க டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் ஏராளமான மக்கள் உள்ளனர். இந்த நிலைமை   மாற வேண்டும் என்று கூறினார்.


கருத்தரங்கின்   நெறியாளர், கட்டுரையாளர் எஸ். குருமூர்த்தி, மத்திய பட்ஜெட் குறித்து பேசுகையில் ஒரு சிறந்த மாற்றம், மற்றும் உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலின் அடையாளம் என்று கூறினார்.

 

3 சதவிகித மக்கள் மட்டுமே பங்குச் சந்தையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர், மீதமுள்ள பங்குச் சந்தை  அந்நிய நேரடி முதலீட்டிலிருந்து வருகிறது, இது நல்லதல்ல என்றார்.

 

ஆடிட்டர் குருமூர்த்தி கூறுகையில், அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் பல விஷயங்களில் ஒன்றிணைந்து  செயல்படவில்லை.   அந்நிலை மாற  வேண்டும். அந்நிய செலாவணி இருப்புக்களை அடகு வைத்து வெளிநாட்டுக் கடன் வாங்குவதற்கு தனிப்பட்ட முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் கூறினார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ்   கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் எஸ். பீட்டர் அல்போன்ஸ்  பேசுகையில், பட்ஜெட்டில் மாநிலங்கள் தன்னாட்சி உரிமையை இழந்துவிட்டன. புதிய வரிகள், கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் வடிவத்தில் இருக்கின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு பட்ஜெட் எதையும் வழங்கவில்லை என்றார். வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையிலான பற்றாக்குறையை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதற்கான வழிகளைக் காட்டாததால் இது வெளிப்படைத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை என்றார்.

 

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வழிகள் இல்லாததால், பட்ஜெட் ஏமாற்றமாக மாறியது என்று திமுக எம்.பி.யும், மாநிலங்களவையில் திமுக  கட்சியின் தலைவருமான திருச்சி என்.சிவா தனது உரையில் தெரிவித்தார். வேலையின்மை ஒழிப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. புழக்கத்தில் இருந்த பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 15,91,000 கோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களில் 15,71,000 நோட்டுகள்  மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதால், நடவடிக்கைக்குப் பின்னர் ஏராளமான தொகைகள் இன்னும் மறைக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி உற்பத்தி மாநிலங்களை பாதித்துள்ளது மற்றும் இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது ஆபத்தான போக்கு என்றார்.

 

சிபிஐ முன்னாள் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், பட்ஜெட் புள்ளிவிவரங்களின் மோசடி மட்டுமே.   இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது ஒரு அமெரிக்க டாலர் 3 ரூபாய்க்கு சமம், ஆனால் இப்போது அது 68 ரூபாய். இது வளர்ச்சியின் நல்ல அறிகுறியா? டாலரைப் பொறுத்தவரை கடன் வாங்குவது நாட்டுக்கு நல்லதல்ல என்றார்.

 

அதிமுக எம்.எல்.ஏ எஸ்.செம்மலை பட்ஜெட்டை தொலைநோக்குடையது என்று விவரித்தார். ஆனால் எரிபொருள் தொடர்பான செஸ் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல பாதையை காட்டியுள்ளது என்றார்.

 

மதிமுக இளைஞர் பிரிவு செயலாளர்  வி. ஈஸ்வரன், பட்ஜெட் திட்டங்களில் பிரதமர் தேர்தல் வாக்குறுதியின்போது அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்த எந்த திட்டமும் இல்லை. இது ஒரு மலிவான பட்ஜெட் என்றார்.

 

சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,  நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைப்பது ஒரு மோசமான நடைமுறை என்று அவர் கூறினார். இது அனைத்து இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களையும் இழப்புக்குள்ளாக்கியது என்றார். பட்ஜெட் விவசாயிகளுக்கு எதையும் வழங்கவில்லை அல்லது நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வது பற்றி பேசவில்லை.

 

மாநில பாஜகவின் இளைஞர் பிரிவு தலைவர் வினோஜ் பி.செல்வம், பட்ஜெட்டை வளர்ச்சி சார்ந்ததாக விவரித்தார். இது அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டாகும். பட்ஜெட்டில்  உள்ள நல்ல பல்வேறு திட்டங்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

 

வி.சி.கே.யின் துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி கூறுகையில், எஸ்.சி மற்றும் எஸ்.டி.க்களுக்கான ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது, தனிநபர்களின் வருமான வரி விலக்கு வரம்பில் அதிகரிப்பு இல்லை என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

இமெயிலில் வந்த தகவல்; பதறிய விஐடி பல்கலைக்கழகம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
 threat to VIT University

வேலூர் காட்பாடி பகுதியில் உள்ளது விஐடி தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம். 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு - வெளிநாட்டு மாணவ-மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். லட்சக்கணக்கில் நன்கொடை, கட்டணம் செலுத்துபவர்கள் மட்டுமே இதில் பயில முடியும். நாட்டில் போபால், சென்னை உட்பட வேறு சில இடங்களிலும் வி.ஐ.டி கல்வி நிலையம் செயல்படுகிறது. வேலூர் பல்கலைக்கழகத்தின் மீது அரசு நீர்நிலை பகுதிகள் ஆக்கிரமிப்பு உட்பட சில குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் உண்டு.

இந்நிலையில், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. விஐடி பல்கலைக்கழகத்தின் இமெயிலுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட ஆறு குழுக்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட போலீசார் விஐடி பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்று பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். போலீசார் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரப்பில் மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். நள்ளிரவு வரை தொடர்ந்த சோதனையில் எந்த ஒரு வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Next Story

கஞ்சா விற்பனை செய்த விஐடி பல்கலைகழக மாணவர்கள் 8 பேர் கைது!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல்நிலைய எஸ்.ஐ ராஜசேகருக்கு, கஞ்சா விற்பனை குறித்து வந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் பிப்ரவரி 10ந் தேதி பழைய காட்பாடியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர். அந்த ரெய்டில் 12 கிலோ கஞ்சாவுடன் 8 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, 8 பேரும் வேலூரில் பிரபலமாகவுள்ள விஐடி பல்கலைகழகத்தில் படிப்பதாக தகவல் கூறியுள்ளனர். அதனை போலீஸாரும் உறுதி செய்துக்கொண்டுள்ளனர்.

 

Eight students arrested for selling cannabis

 

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ளது பிரபலமான விஐடி நிகர்நிலை பல்கலைக்கழகம். முன்னாள் அரசியல்வாதியான விஸ்வநாதன் குடும்பத்தாரால் நடத்தப்படுகிறது. இந்த நிகர்நிலை பல்கலைகழகத்தின் கிளைகள் சென்னை, போபால் போன்ற இடங்களிலும் உள்ளன.

இந்த பல்கலைகழகத்தில் சேர தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. பெரிய அளவில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலும் பணக்காரர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் படிக்கும் பல்கலைகழகமாக இருப்பதால் யாரையும் இந்த பல்கலைக்கழகம் கட்டுப்படுத்துவதில்லை. இதனாலயே கஞ்சா விற்பனை செய்து 12 மாணவர்கள் சிக்கியுள்ளார்கள்.

அடிக்கடி இந்த பல்கலைகழகத்தில் பலமுறை மாணவர்களுக்குள் கத்தி குத்துயெல்லாம் நடந்துள்ளன. பல்கலைகழக வளாகத்தில், விடுதியில் மாணவர்கள் தற்கொலை என தகவல்கள் வெளியே வரும், அதன் உண்மை தன்மையை வெளியே வரவிடாமல் கல்லூரி நிர்வாகம் தனது அரசியல், பண அதிகாரத்தை வைத்து தடுத்து வருகிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.