விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில்
அம்மா உணவகம் மூடல்

தமிழக முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை,எளிய மக்கள் பயன்பெற வேண்டி மாநகரங்களில் அம்மா உணவகம் ஆரம்பித்து மலிவு விலையில் உணவு வழங்கி வந்தனர்.
அத்திட்டத்தை விரிவு படுத்திய முதல்வர் ஜெயலலிதா நகராட்சி பகுதி மற்றும் மக்கள் பயன்பாடு உள்ள இடங்களில் அம்மா உணவகம் ஆரம்பித்து மக்கள் பாரட்டை பெற்றார்.
இந்நிலையில் அவர் மறைந்தார் பின்பு வந்த ஆட்சியாளர்களின் அலட்சிய போக்கால் தமிழகத்தில் பல இடங்களில் அம்மா உணவகம் மூடபட்டு வருகின்ற நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் கடந்த சில மாதங்களாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமலும்,பராமரிப்பின்றி மூடி கிடக்கிறது.இதனால் இதுவரை இதன்மூலம் பயன்பெற்று வந்த நூற்றுக்கணக்கான ஏழை,எளிய நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தனியார் உணவகங்களில் அதிக விலை கொடுத்து உணவு வாங்கி பயன் படுத்தும் நிலை தொடர்ந்து வருகிறது.உடனடியாக மாவட்ட நிர்வாகம் அம்மா உணவகத்தை திறக்குமா என எதிர்பார்கின்றனர்.
- எஸ்.பி.சேகர்