Skip to main content

ஆண்டு கடந்தும் விடாத விஜிலென்ஸ்... அரண்டுபோன வாணியம்பாடி அதிகாரிகள்...

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2015-16ம் ஆண்டு அசோகன் என்பவர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றினார். அப்போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில்  சில ஆவணங்கள் கைப்பற்றி எடுத்து சென்றனர். விசாரணை நிலுவையில் இருந்து வந்தது.


 

அசோகன் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் வரும் 30ம் தேதி ஒய்வு பெற உள்ளார். 


 

Vigilance that is not over the year...

 

இந்நிலையில் வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் குழு இணைந்து, ஒசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அசோகனை வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அழைத்து வந்து பழைய வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

 

இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்த இடைத்தரகர்கள் தாங்கள் வைத்துள்ள ஜெராக்ஸ் கடை, பேப்பர் கடைகளை மூடி விட்டு பயந்துப்போய் ஓடிவிட்டனர். அலுவலகத்தை அதிகாரிகள் மூடிவிட்டதால் பொதுமக்களும் திரும்பி சென்றுவிட்டனர்.
 

 

அதிகாரி அசோகன் ஒய்வு பெற 20 நாட்கள் இருக்கும் நிலையில் பழைய வழக்கு அதிகாரிகள் மீண்டும் விசாரணை தீவிரப்படுத்துவதால் சமந்தப்பட்ட அதிகாரியோடு அந்த அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்கலும் கலகத்தில் உள்ளனர்.
 

 

அசோகன் வாணியம்பாடியில் பணியாற்றியபோது, வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர்கபில் க்கு அந்த அதிகாரி வேண்டப்பட்டவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி; கையும் களவுமாக பிடித்த போலீசார் 

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

ariyalur district rural development women authority issue 

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் மணிமாறன். இவர் அரசுத் திட்டப் பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரராகவும் உள்ளார். தற்போது இவர் ஊரக வளர்ச்சித் துறையில் நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறங்களில் உலர் களம் அமைத்தல் போன்ற பணிகளைச் செய்வதற்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்தப் பணிகளைச் செய்து முடித்து இதற்கான தொகையைப் பெறுவதற்காக தனக்கு இரண்டு சதவீத கமிஷன் பணம் தர வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறையின் கோட்ட அதிகாரியாகப் பணி செய்து வரும் வஹிதா பானு என்ற பெண் அதிகாரி கராராக மணிமாறனிடம் பணம் கேட்டுள்ளார்.

 

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் மணிமாறன் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி நேற்று கமிஷன் தொகையாக ரூபாய் 30 ஆயிரம் பணம் தருவதாகவும் அதைப் பெற்றுக் கொள்வதற்கு ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதிக்கு வருமாறு மணிமாறன் வஹிதா பானுவுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி வஹிதா பானு அந்த இடத்திற்கு நேரில் சென்று மணிமாறனிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தைப் பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீசார் வஹிதா பானுவை லஞ்ச பணத்துடன் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். ஒரு பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி உள்ள சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு; ஆவணங்களைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர்

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

trichy former bank officer issue police captured documents 

 

அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் வீடுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.

 

திருச்சி காஜாமலை பிச்சையம்மாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி (வயது 72). இவருடைய மகள் ஆர்த்தி வேலூர் மாவட்டத்தில் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். ஆர்த்தியின் கணவர் ஆனந்தமூர்த்தி சென்னையில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது மகள் ஆர்த்தி மற்றும் மருமகன் ஆனந்தமூர்த்தி ஆகிய இருவரும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆர்த்தியின் தந்தையும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியுமான கலைமணி வீட்டில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் 3 பேர் என சோதனை நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 2013 ஆம் ஆண்டு சூரியூர் பகுதியில் 72 ஏக்கரில் கோழி பண்ணை அமைக்க இடம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.