Skip to main content

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய உதவி ஆய்வாளர் மீது வழக்கு; நீதிமன்றம் அதிரடி

Published on 30/08/2020 | Edited on 30/08/2020
aqaqa

 

 

ஒன்றரை ஆண்டு சட்டப்போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் இளம்பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றிய சப் இன்ஸ்பெக்டர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஓரடியம்பலத்தை சேர்ந்தவர் விவேக் ரவிராஜ். 29 வயதான இவர் சப் இன்ஸ்பெக்டராக 2017 ஆம் ஆண்டு மணல்மேடு காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, அப்பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற தனியார் நிறுவனத்தில் பனியாற்றிவந்த இளம்பெண் ஒருவருடன் முகநூல் மூலம் நட்பை  ஏற்படுத்திக்கொண்டு இருவரும் பழகினர். பிறகு நட்பு காதலாக மாறி உல்லாசமாக பல இடங்களிலும் சுற்றியுள்ளனர். ஒரு கட்டத்தில் மணல்மேடு கல்லூரிக்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் இருவரும் கனவன் மனைவியைபோல தனிமையில் இருக்க அதில் சுபஸ்ரீ கர்ப்பமானார். இதை கேட்ட உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் ஆத்திரத்தில் பொங்கியெழுந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கருவை கலைத்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என கருவை கலைக்கச்சொல்லி கட்டாயப் படுத்தியிருக்கிறார்.

 

இதற்கு சுபஸ்ரீ உடன்படாததால் ஆத்திரமான விவேக் ரவிராஜ் முதலில் தனது நண்பர்கள், பிறகு அதிமுக அமைச்சர் ஒருவர்மூலம் அதிமுககாரர்கள் என பலர் மூலம் முயற்சித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது தாயார் ராஜாத்தியும் "நீ கருவை கலைத்தால் தான் தனது மகனை திருமணம் செய்துகொள்ள சொல்லுவேன், என கட்டாயப்படுத்தியதால் அவரது பேச்சை நம்பி கருவை கலைத்துள்ளார். சுபஷீ தனது கருவை கலைத்த பிறகு விவேக் அவரிடம் பேசுவதைவிட தவிர்த்துவிட்டார். அதோடு திருமணம் செய்து கொள்வதாகவும் மறுத்துவிட்டார்.

 

சுபஷீ தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டபோதெல்லாம் கொடூரமான முறையில் மிரட்டிதிட்டியிருக்கிறார். மதுக்கூர் காவல் நிலையத்திற்கு பணிமாற்றமாக சென்ற போது அங்கேயும் சென்று கேட்டதற்கு, அங்கேயே திட்டி அடித்து சித்தரவதை செய்துள்ளார் விவேக் ரவிராஜ். தனக்கு நடந்த அனைத்து கொடுமையையும் ஆதாரமாக திரட்டிய அந்த இளம்பெண், விவேக் ரவிராஜ் தன்னிடம் ஆசையோடு பேசிய ஆடியோ, வீடியோ கசந்தபோது மிரட்டிய ஆடியோ, புகைப்படம் என எல்லாவற்றையும் ஆதாரத்தோடு சிடியாக சேர்த்து மயிலாடுதுறை டிஎஸ்பி, நாகை எஸ்பி, தஞ்சை சரக டிஐஜி, முதல்வரின் தனிப்பிரிவு என அனைவரிடமும் புகார் கொடுத்தார். (இதனை நக்கீரனும் இரண்டு பக்க செய்தியாக வெளியிட்டது) அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

 

அதன்படி புகாரை பெற்ற அனைத்து மகளிர் ஆய்வாளர் கோப்பெருந்தேவி, தற்போது வலிவலம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் விவேக்ரவிராஜ் அவரது தாயார் ராஜாத்தி மீது ஏமாற்றுதல் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.