Skip to main content

அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் மகன்... விஷம் குடித்த பெற்றோர்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

TRICHY AIPORT SON GOVERNMENT QUARANTINE PARENTS INCIDENT

 

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள அழுந்தலையர் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், சிங்கப்பூரில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவர் சமீபத்தில் சொந்தவூருக்கு திரும்பியுள்ளார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் கரோனா மருத்துவ பரிசோதனைக்காக அவரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பின்பு, அவர் அரசு தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அனுப்பப்பட்டார். 

மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதனிடையே மகன் அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்த தகவலை அறிந்த பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாதாக தகவல் கூறுகின்றன. அவர்களால் ஆறுதல் தேட முடியாமல் வயலுக்கு அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வீட்டிலே மயங்கிக் கிடந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த சிறுகனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விஷம் குடித்த தம்பதியிரை மீட்டு திருச்சி அரசுமருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிசிக்சையில் இருக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.